Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசியாவின் உல்லாசக் கப்பல் நடுவமாக உருவெடுக்க சிங்கப்பூருக்கு வாய்ப்பு

சிங்கப்பூருக்குச் சென்ற ஆண்டு சுமார் 400 சொகுசுக் கப்பல்கள் வந்து சென்றன.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியாவின் உல்லாசக் கப்பல் நடுவமாக உருவெடுக்க சிங்கப்பூருக்கு வாய்ப்பு

கோப்புப் படம்: Royal Caribbean Cruise

சிங்கப்பூருக்குச் சென்ற ஆண்டு சுமார் 400 சொகுசுக் கப்பல்கள் வந்து சென்றன.

அதன் மூலம் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூர் வந்தனர்.

ஆண்டு அடிப்படையில் அந்த எண்ணிக்கை சுமார் 35 விழுக்காடு அதிகம்.

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிங்கப்பூரின் 2 முக்கிய சொகுசுக் கப்பல் முனையங்களையும் விரிவுபடுத்த வேண்டிவரலாம்.

Greater Southern Waterfront எனும் பரந்த தென் நீர்முகப்புப் பகுதியில் அவை அமைந்துள்ளன.

மரினா பே சொகுசுக் கப்பல் முனையத்தில் தற்போதுள்ள இரண்டு அணைகரைகளும் நாளொன்றுக்கு நான்கு கப்பல்கள் வரை கையாள்கின்றன.

வருங்காலத்தில் புதிய, பெரிய கப்பல்களைக் கையாளும் அளவுக்கு முனையத்தை மேம்படுத்துவதுபற்றி வட்டார நாடுகளோடு இணைந்து செயலாற்றி வருவதாக, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்