Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் முற்றிலும் கழிவற்ற தேசமாக உருவாக என்ன செய்ய வேண்டும்? பொதுமக்கள் கருத்து

சிங்கப்பூர் முற்றிலும் கழிவற்ற தேசமாக உருவாக இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முற்றிலும் கழிவற்ற தேசமாக உருவாக இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

மறுபயனீடு மேலும் வசதியானதாக இருக்கவேண்டும்.
பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஊக்குவிக்கவேண்டும்.
அவையே அந்த இரண்டு அம்சங்கள் என இணையம்வழி, அரசாங்கம் நடத்திய பொதுக் கருத்துத் திரட்டில் கலந்துகொண்டவர்கள் கூறுகின்றனர்.

அந்த விவகாரம் குறித்து முதல்முறையாகக் கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துத் திரட்டு நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

கடைகளுக்குச் சொந்தப் பைகளைக் கொண்டுசெல்வது போன்ற, மறுபயனீட்டுக்கு மக்கள் சுயமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக, சுமார் 90 விழுக்காட்டினர் கூறினர்.

மின்கழிவைக் குறைக்க, கூடுதல் நடவடிக்கை தேவை என்று 70 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

பழைய மின்சாதனங்களை விற்கவோ, நன்கொடையாக வழங்கவோ மக்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று கருத்துத் திரட்டில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர்.

மின்சாதனங்களை மறுபயனீடு செய்வதற்கான நடவடிக்கை மேலும் வசதியானதாக இருக்கவேண்டும் என்று சுமார் 85 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்