Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரிலும் ஆசிய-பசிபிக்கிலும் உள்ள பெண் தொழில்முனைவர்களை ஒன்றிணைக்கும் புதிய திட்டம்

சிங்கப்பூரிலும் ஆசிய-பசிபிக்கிலும் உள்ள பெண் தொழில்முனைவர்களை ஒன்றிணைக்கும் புதிய திட்டம் 

வாசிப்புநேரம் -

பெண் தொழில்முனைவர்களை ஒன்றிணைக்க, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

SG-WEN அதாவது சிங்கப்பூர்ப் பெண்களுக்கான தொழில்முனைவர் கட்டமைப்பு என்று அது அழைக்கப்படும்.

ஆசிய-பசிபிக் வட்டாரத்திலுள்ள பெண் தொழில்முனைவர்களை ஒன்றிணைக்கத் திட்டம் வகைசெய்யும் என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) குறிப்பிட்டார்.

SG-WEN மூலம் ஏனையப் பெண் தொழில்முனைவர்களுடன் மட்டுமல்லாமல்
வர்த்தகத் தலைவர்கள், வர்த்தகச் சங்கங்கள் ஆகிய தரப்புகளுடனும் தொடர்புகொள்ளலாம்.

திட்டம் அதிகாரபூர்வமாய்த் தொடங்குவதற்கு முன்பே 50-க்கும் அதிகமானோர் அதற்குப் பதிவுசெய்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்