Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி வைத்திருப்போரும் குறுகியகால வருகையாளர்களும் சிங்கப்பூருக்குள் வரத் தடை

இந்தியாவிற்குக் கடந்த 2 வாரங்களுக்குள் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் குறுகிய கால வருகையாளர்களும் நாளை மறுநாள் (ஏப்ரல் 24) முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி வைத்திருப்போரும் குறுகியகால வருகையாளர்களும் சிங்கப்பூருக்குள் வரத் தடை

(படம்: REUTERS/Edgar Su)

இந்தியாவிற்குக் கடந்த 2 வாரங்களுக்குள் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் குறுகிய கால வருகையாளர்களும் நாளை மறுநாள் (ஏப்ரல் 24) முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மற்றொரு நாட்டிலிருந்து, இந்தியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொண்டோரும் சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கனவே ஒப்புதல் பெற்றோரும் அவர்களில் அடங்குவர்.

இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான புதிய
வருகையாளர்கள் கட்டுமான, ரசாயனப் பெட்ரோலிய, கடல்துறைகளைச் சார்ந்தவர்கள் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அவர்கள் தங்கும்விடுதிகளில் வசிப்பதையும் திரு. வோங் சுட்டினார்.

தற்போதைய அறிவிப்பு, அந்தத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குழு அறிந்திருப்பதாக அவர் சொன்னார்.

பல சிறிய, நடுத்தர நிறுவனங்களும் குத்தகையாளர்களும் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.

அத்தகைய நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதுபற்றி அரசாங்கம் ஆராயும் என்றார் கல்வி அமைச்சருமான திரு. வோங். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்