Images
  • sg bikes
    (படம்: Amir Yusof) 

சிங்கப்பூரின் ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வு நிறுவனமாகவுள்ள SG Bike

சிங்கப்பூர்: சீனாவின் Mobike நிறுவனத்துடனான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டால் சிங்கப்பூரின் ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வு நிறுவனமாக SG Bike உருவெடுக்கும்.

Mobike அதன் பகிர்வு சைக்கிள் உரிமத்தை SG Bike நிறுவனத்திற்கு மாற்றவிருப்பதாக இரு நிறுவனங்களும் இன்று (ஆகஸ்ட் 13) அறிவித்தன.

அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் மூலம் அதிக சைக்கிள்களோடு SG Bike, கூடுதல் இடங்களுக்குச் சேவைகளை விரிவுபடுத்தும் .

சிங்கப்பூரில் தனது சைக்கிள் பகிர்வுச் சேவை உரிமத்தை மார்ச் மாதத்தில் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் திரும்பக் கொடுக்க முயன்றது Mobike.

Ofo, oBike நிறுவனங்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய மூன்றாவது சீன சைக்கிள் பகிர்வு நிறுவனம் Mobike.

தற்போது SG Bike சைக்கிள் பகிர்வுச் சேவையில் 3,000 சைக்கிள்கள் உள்ளன.

ஒப்பந்தம் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்கள் SG Bike செயலியைக் கொண்டு Mobike சைக்கிள்களையும் பயன்படுத்தலாம். 

Top