Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலைச் சமாளிக்க மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலைச் சமாளிக்க மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலைச் சமாளிக்க மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

படம்: CNA

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலைச் சமாளிக்க மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கிறது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் இன்று பிற்பகல் வாக்கில் அதுகுறித்து அறிவிப்பார்.

பத்தாண்டுகளில் இல்லாத பெருஞ்சவாலை எதிர்கொள்ளும் வேளையில் சிங்கப்பூருடையது மட்டுமல்ல இங்குள்ள சமுதாயத்தின் மீண்டு எழும் ஆற்றலும் சோதிக்கப்படுவதாகத் திரு. ஹெங் Facebook-இல் பதிவிட்டார்.

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட அனைத்துலக நிதி நெருக்கடியின் போது நாணய வாரியத்தின் தலைவராக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

இருள் நிறைந்த அந்தச் சூழலிலிருந்து எவ்வாறு சிங்கப்பூர் மீண்டு வந்தது என்பதை திரு. ஹெங் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள காலமும் சுமுகமாக இருக்காது என்று குறிப்பிட்ட அவர், தனிநபர்களின் வேலைகளைப் பாதுகாக்கவும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் மீள்திறனுக்குரிய வரவுசெலவுத்திட்டம் கைகொடுக்கும் என்றார்.

குடும்பங்களுக்காவும் திட்டத்தில் கூடுதல் உதவி வழங்கப்படும் என்றார் அவர்.

துணைப் பிரதமர் ஹெங்கின் உரை, தொலைகாட்சி, வானொலி, இணையம் வழி நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்