Images
  • sg covid (8)
    (படம்: Reuters/Edgar Su)

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 307 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஒரு சிங்கப்பூரருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 307 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,512 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக அளவில், ஒரு சிங்கப்பூரர் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் ஐவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். 

Top