Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் 38 பேருக்குக் கிருமித்தொற்று; டிசம்பர் 15க்குப் பிறகு, தங்கும் விடுதியில் ஒருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று உள்ளூரில் ஒருவருக்குக் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் 38 பேருக்குக் கிருமித்தொற்று; டிசம்பர் 15க்குப் பிறகு, தங்கும் விடுதியில் ஒருவருக்குப் பாதிப்பு

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இன்று உள்ளூரில் ஒருவருக்குக் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிப்பவர். கடந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு, தங்கும் விடுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

சமூக அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

வெளிநாட்டிலிருந்து வந்த 37 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

சிங்கப்பூர் வந்ததிலிருந்து அவர்கள், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்