Images
  • sg cases (16)
    (படம்: Facebook/Lawrence Wong)

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 4 பேருக்குக் கிருமித்தொற்று; தங்கும் விடுதியில் வசிக்கும் ஒருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 4 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்.

அவர் தங்கும் விடுதியில் வசித்துவருகிறார்.

மற்ற 3 பேரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

இங்கு வந்ததிலிருந்தே அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 59,883.

நோய்த்தொற்றால் 29 பேர் மாண்டனர்.

Top