Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19:இந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்று மேலும் 34 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19:இந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்குக் கிருமித்தொற்று

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் நேற்று மேலும் 34 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 57, 488.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சமூக அளவில் யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து திரும்பிய 6 பேருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் இருவர் நிரந்தரவாசிகள், இருவர் வேலை அனுமதி வைத்திருப்போர், மற்ற இருவர் மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்போரைச் சார்ந்திருப்பவர்கள்.

6 பேரும் இங்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்.

அவர்களில் 13 பேர் ஏற்கனவே கிருமித்தொற்று உறுதியானோருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

எஞ்சிய 15 பேருக்கு, அமைச்சு 14 நாள்களுக்கு ஒரு முறை நடத்தும் வழக்கமான சோதனையில் கிருமித்தொற்று உறுதியானது.

சிங்கப்பூரில் மேலும் 82 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.

அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 56,884.

இன்னும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.

சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் 526 பேர் தங்கியுள்ளனர்.

அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக அமைச்சு கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்