Images
  • sg covid (13)
    (படம்: AFP/Roslan Rahman)

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்குக் கிருமித்தொற்று; உள்ளூர் அளவில் இருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 9 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் அளவில் இருவருக்குப் பாதிப்பு.

அவர்களில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டார்.

இன்னொருவர், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்.

வெளிநாடுகளிலிருந்து வந்த 7 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து இங்குப் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 58,003 ஆனது. 

Top