Images
  • sg cases (9)
    (கோப்புப் படம்: Reuters/Edgar Su)

COVID-19: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 12 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.

புதிதாகப் பாதிக்கப்பட்ட 12 பேர் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58,160 ஆனது. 

Top