Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 18 பேருக்குப் பாதிப்பு; இரண்டு வாரங்களாக உள்ளூர் அளவில் எவருக்கும் பாதிப்பில்லை

சிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

இம்மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு இவ்வளவு அதிமானோர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

பாதிக்கப்பட்ட 18 பேரும்
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள்.

14 பேர் வேலை அனுமதியில் இருப்பவர்கள். அவர்களில் 13 பேர் சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்களாகப் பணிபுரிகின்றனர்.

சமூக அளவில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாரும் பாதிக்கப்படவில்லை.

சமூக அளவில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக யாருக்கும் கிருமித்தொற்றுப் பாதிப்பு இல்லை.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இங்குக் கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58,183.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்