Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இருதரப்புத் தற்காப்பு உறவில் கணிசமான முன்னேற்றம்: சிங்கப்பூர், சீனத் தற்காப்பு அமைச்சர்கள்

சிங்கப்பூரும் சீனாவும், அதன் நட்பார்ந்த தற்காப்பு உறவை, மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.

வாசிப்புநேரம் -
இருதரப்புத் தற்காப்பு உறவில் கணிசமான முன்னேற்றம்: சிங்கப்பூர், சீனத் தற்காப்பு அமைச்சர்கள்

(படம்: MINDEF)

சிங்கப்பூரும் சீனாவும், அதன் நட்பார்ந்த தற்காப்பு உறவை, மறுவுறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.

சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் (Ng Eng Hen), சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபங்ஹேயும் (Wei Fenghe) காணொளிவாயிலாக நடைபெற்ற
கருத்தரங்கில் சந்தித்தபோது, அந்த உறுதி தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே, காலப்போக்கில் மேம்பட்டு வளர்ச்சி கண்டுள்ள
நட்பார்ந்த தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தும் நோக்கில், அந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

இருதரப்புத் தற்காப்பு உறவில் எட்டப்பட்டிருக்கும் கணிசமான முன்னேற்றத்தை, இரு அமைச்சர்களும் சுட்டினர்.

வட்டாரப் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், ஆசியான்-சீனத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடைமுறைக்கு ஏற்ற வழிகள் குறித்தும், இருவரும் கலந்துரையாடினர்.

Shangri-La மாநாடு இந்த ஆண்டு நடைபெறாமல் போனாலும், அதற்கு வலுவான ஆதரவு அளித்த ஜெனரல் வெய்க்கு, டாக்டர் இங் நன்றி தெரிவித்தார்.

வட்டாரக் கிருமித்தொற்றுச் சூழல் மேம்பட்டவுடன் சிங்கப்பூருக்கு வருகையளிக்கும்படி ஜெனரல் வெய்க்கு டாக்டர் இங் அழைப்பு விடுத்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்