Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் சிங்கப்பூர்க் களிமண் விழா

சிங்கப்பூர்க் களிமண் விழா, சிங்கப்பூரர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்க் களிமண் விழா, சிங்கப்பூரர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குயவரும் ஒரே அளவு களிமண்ணைக் கொண்டு வித்தியாசமான படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

அதேபோன்று ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் சொந்த வழிகளில் பங்களிக்கும் சமூகத்தை உருவாக்குவதுதான் Enabling Masterplan 2030இன் நோக்கம்.

என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

சிங்கப்பூரில் முதல்முறையாக நடைபெறவுள்ள களிமண் விழாவில் பல கற்றல் நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் இடம்பெறும்.

130 குயவர்களின் படைப்புகளைக் கண்காட்சியில் காணலாம்.

குறிப்பாக Red - Works என்ற கண்காட்சியில் விற்கப்படும் பொருள்களிலிருந்து திரட்டப்படும் தொகை மீடியாகார்ப்பின் Enable Fundக்குச் செல்லும்.

அது உடற்குறையுள்ளோருக்கு உதவப் பயன்படுத்தப்படும்.

களிமண் விழா இம்மாதம் 29ஆம் தேதிவரை நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்