Images
  • Singapore weather (1)
    (படம்: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை வெப்பமாக இருக்கலாம்

சிங்கப்பூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை வெப்பமாக இருக்கக்கூடுமென்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

வெப்பநிலை, பெரும்பாலும் 25 டிகிரி செல்சியஸுக்கும், 34 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்களில் அது 35 டிகிரி செல்சியஸ்வரை உயரும் என்று ஆய்வகம் கூறியது.

சில நாள்கள் காலை, பிற்பகல் நேரங்களில் மிதமான இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், தீவின் பெரும்பாலான பகுதிகளில், ஆகஸ்ட் மாதச் சராசரி மழையை விட அடுத்த 2 வாரங்களுக்கான மழைப்பொழிவு சற்றுக் குறைவாக இருக்கும்.  

Top