Images
  • sg covid (30)
    (கோப்புப் படம்: Marcus Mark Ramos)

மியன்மாரைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் உட்பட, சமூக அளவில் இருவருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் இருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர், மியன்மாரைச் சேர்ந்த 29 வயது கட்டுமான நிறுவன ஊழியர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவருக்கு, முன்னைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பு ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இம்மாதம் முதல் தேதியும், 4ஆம் தேதியும் காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக அவர் தனியார் மருந்தகத்தை நாடினார்.

இரண்டு முறையும் அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படவில்லை.

பிறகு, கடந்த 5ஆம் தேதி, வழக்கமாக நடத்தப்படும் முன்னெச்சரிக்கைப் பரிசோதனையில், அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட மற்றொருவருக்கு NTUC FOODFARE கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பிருந்தது.

அந்த 21 வயது மலேசிய ஆடவர், ஏங்கர்வேல் (Anchorvale) ரோடு, புளோக் 308-இல் உள்ள உணவு நிலையத்தில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Top