Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் - விவரங்கள்

சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் - விவரங்கள்

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

அவர்கள், சிங்கப்பூர் காவல்துறையின் K9 நாய்கள் பிரிவில் பணிபுரியும் நிர்வாக அதிகாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சுகாதார அமைச்சின் தொடர்புத் தடங்களை அடையாளம் காணும் பணிகளின் ஓர் அங்கமாக, அவ்விருவருக்கும் இம்மாதம் 16ஆம் தேதி கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மறுநாளே இருவருக்கும் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களில் ஒருவர், நிர்வாக அதிகாரியின் மனைவி.

43 வயதான அவருக்குக் இம்மாதம் 10ஆம் தேதி கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

அறிகுறிகள் மோசமடையத் தொடங்கியும் அவர் மருத்துவரைக் காணத் தவறிவிட்டார்.

மற்றொருவர், நிர்வாக அதிகாரியின் குடும்ப உறுப்பினரான 66 வயது மலேசியப் பெண்மணி.

அவர், நீண்ட கால விசா அட்டை வைத்திருப்பவர். கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து அவர் சிங்கப்பூரில் வசித்துவருகிறார்.

இம்மாதம் 9 ஆம் தேதி அவருக்குக் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. அவரும் மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவில்லை.

இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிர்வாக அதிகாரி, இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த தனது சக ஊழியரான துணைக் கால்நடை மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்.

இதுவரை, கால்நடை மருத்துவருடன் தொடர்பில் இருந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்