Images
  • cc1

'சிங்கப்பூரில் சமூக மன்றங்கள் சிறப்பான பங்கை ஆற்றுகின்றன': பிரதமர் லீ

சிங்கப்பூர்: சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதிலும் அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த குடியிருப்பாளர்களை ஒருங்கிணைப்பதிலும் சமூக மன்றங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட டெக் கீ சமூக மன்றத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் அவர் இன்று (ஜனவரி 13) அந்தக் கருத்தை முன்வைத்தார்.

அதனை முன்னிட்டே ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் சமூக மன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் அவற்றைப் புதுப்பிக்க அதிகம் செலவு செய்வதாகவும் திரு. லீ கூறினார்.


35 ஆண்டுப் பழமையான டெக் கீ சமூக மன்றம் 2016இல் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது. குடியிருப்பாளர்கள் அதிகம் பயன்படுத்தும் அந்தச் சமூக மன்றத்தில் இடப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது புதுப்பிக்கப்பட்ட சமூக மன்றம்.

மேம்பாட்டுப் பணிகளின் 90 விழுக்காட்டுச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. எஞ்சிய செலவுகளை மேம்பாட்டுப் பணிகளுக்கான குழு திரட்டியது.

குடியிருப்பாளர்களின் ஆலோசனைகளைத் திரட்டியதன் அடிப்படையில் சமூக மன்றத்தில் புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விரிவாக்கம் கண்ட சமூக மன்றத்தில் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்படுவதாக டெக் கீ சமூக மன்றத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் நோலீன் டே ஃபோ கூறினார்.

Top