Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான நிலையத்தில் கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம்

சுவா சு காங்கில் (Choa Chu Kang) உள்ள SUN-DAC நிலையம், கிருமித்தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான நிலையத்தில் கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம்

(படம்: Google Maps/ Screenshot)

சுவா சு காங்கில் (Choa Chu Kang) உள்ள SUN-DAC நிலையம், கிருமித்தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடற்குறையுள்ளோருக்கான அந்த நடவடிக்கை நிலையத்துடன் 12 கிருமிப்பரவல் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

நிலையத்தின் சேவைகளைப் பெறுவோரில் 10 பேரும் அங்கு பணிபுரியும் இருவரும் நோய்வாய்ப்பட்டனர்.

இந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், JMS Singapore நிறுவனத்துடன் 21 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

வேலையிடத்தில் தொடங்கிய கிருமிப்பரவல், சம்பந்தப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களையும் பாதித்துள்ளதாய் சுகாதார அமைச்சு சொன்னது.

16 பெரிய குழுமங்களை அமைச்சு கண்காணித்து வருகிறது.

Blue Stars வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது.

Avery Lodge வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் மேலும் 10 புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விடுதிகளைத் தாண்டி கிருமி பரவியதாக ஆதாரம் ஏதும் இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்