Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

LearnJoy கல்வி நிலையம் - நோய்த்தொற்றுக் குழுமம்

LearnJoy கல்வி நிலையம், புதிய கிருமித்தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

LearnJoy கல்வி நிலையம், புதிய கிருமித்தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு ஊழியர் ஒருவரும் 9 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

LearnJoy கல்வி நிலையத்தையும் சேர்த்து மொத்தம் 9 பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்களைச் சுகாதார அமைச்சு கண்காணித்து வருகிறது.

யீஷுனில் (Yishun) உள்ள My Little Campus பாலர்பள்ளியுடன் மேலும் 5 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

அவர்களையும் சேர்ந்து பாலர்பள்ளியுடன் தொடர்புடைய 24 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 2 ஊழியர்கள், 20 மாணவர்கள், 2 குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர்.

Pfizer Asia Pacific நிறுவனத்துடன் மேலும் 5 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

Blue Stars வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் 10 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133ஆக அதிகரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்