Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 7 கிருமித்தொற்றுக் குழுமங்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுகின்றன

சிங்கப்பூரில் 7 கிருமித்தொற்றுக் குழுமங்களைச் சுகாதார அமைச்சு அணுக்கமாய்க் கண்காணித்து வருகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 7 கிருமித்தொற்றுக் குழுமங்களைச் சுகாதார அமைச்சு அணுக்கமாய்க் கண்காணித்து வருகிறது.

Maple Bear Loyang இல் புதிதாக இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16க்கு உயர்ந்துள்ளது.

அவர்களில் 13 பேர் பாலர் பள்ளி மாணவர்கள். எஞ்சியோர் ஊழியர்கள்.

மனநலக் கழகத்தில் மேலும் 9 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டோர் 153க்குக் கூடியுள்ளது.

வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் 1.15.

அது நேற்று முன்தினத்தை விட சற்றே உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில், வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் 1க்கும் குறைந்தால், மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்