Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கரையோரப் பூந்தோட்டம், Bollywood Veggies உள்ளிட்ட சில இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரையோரப் பூந்தோட்டம், Bollywood Veggies உள்ளிட்ட சில இடங்களுக்குக் சென்றிருந்தனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரையோரப் பூந்தோட்டம், Bollywood Veggies உள்ளிட்ட சில இடங்களுக்குக் சென்றிருந்தனர்.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த இடங்களைச் சுகாதார அமைச்சு நேற்று இரவு வெளியிட்டது.

பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்கள்:

  • கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள Flower Dome, Cloud Forest (ஏப்ரல் 6)
  • Bollywood Veggies-இல் உள்ள Poison Ivy கடை (ஏப்ரல் 10)
  • வாம்போ உணவங்காடி நிலையம் ( (ஏப்ரல் 6)
  • 84 மரீன் பரேட் சென்ட்ரலில் உள்ள சந்தை, உணவங்காடி நிலையம். (ஏப்ரல் 9)
  • புக்கிட் பாஞ்சாங் சந்தை, உணவங்காடி நிலையம் (ஏப்ரல் 12)
  • 28 லோராங் அம்பாஸில் உள்ள Wheeler's Yard (ஏப்ரல் 6)
  • 402, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள Penny பல்கலைக்கழகம் (ஏப்ரல் 9)
  • 658 பொங்கோல் ஈஸ்டில் உள்ள Leong Ji Seafood (ஏப்ரல் 10)
  • 348 பிடோக் ரோட்டில் உள்ள The Bedok Marketplace (ஏப்ரல் 11)
  • மரீன் பரேட் பொது நூலகம் (ஏப்ரல் 9 )
  • பூன் லே ஷாப்பிங் சென்டரில் உள்ள Al Barakah Health and Beauty Mart கடை (ஏப்ரல் 8)

குறிப்பிடப்பட்ட அந்த இடங்களுக்குச் சென்று திரும்பியவர்கள் முன்னெச்சரிக்கையாக, 14 நாள்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.

அந்த இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

அங்கு கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்