Images
COVID-19: வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்குப் பாதிப்பு; உள்ளூர் அளவில் எவருக்கும் பாதிப்பில்லை
சிங்கப்பூரில், தொடர்ந்து 15-ஆவது நாளாகச் சமூக அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
இன்று புதிதாக 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
அவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் வந்த பிறகு, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.