Images
  • sg cases (14)

சிங்கப்பூரில் நேற்று மேலும் 17 பேருக்குக் கிருமித்தொற்று - விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று மேலும் 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மொத்தம் 58,946.

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் இங்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர். இருவர் நிரந்தரவாசிகள். அவர்கள் இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூர் திரும்பினர்.

மேலும் 13 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்கள். அவர்கள், இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

எஞ்சிய ஒருவர், ஜப்பானிலிருந்து வந்த சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

இங்கு வந்தவுடன் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உடனே அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

Top