Images
  • vaccine
    (படம்: AFP/Daniel ROLAND)

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உருவாக்கிவரும் COVID-19 தடுப்பூசிகள் - இறுதிக் கட்டச் சோதனை அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் தொடங்கலாம்

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கிவரும் COVID-19 தடுப்பூசியின் இறுதிக் கட்டச் சோதனை, அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அது, இம்மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Duke-NUS பல்கலைக்கழகமும், அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Arcturus-உம் இணைந்து Lunar-Cov19 தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.

பிற தடுப்பூசிகளைப் போல அந்தத் தடுப்பூசியை பத்திரப்படுத்த,உறைநிலைக்குக் கீழ்ப்பட்ட தட்பநிலை தேவையில்லை.

Lunar-Cov19 தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தும் ஆரம்பக் கட்டப் பரிசோதனை, ஆகஸ்ட் மாதம் தொடங்கி, சென்ற மாதம் முடிவுற்றது.

அதில் நல்ல முடிவுகள் கிடைத்ததாக SingHealth குழுமம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சுமார் 106 பேர் ஆரம்பக் கட்டப் பரிசோதனையில் பங்கேற்றனர்.

அவர்களில் யாருக்கும், ஆபத்தான பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை.

அதேபோல், பரிசோதனையில் பங்கேற்பதிலிருந்து யாரும் பின் வாங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இறுதிக்கட்டச் சோதனையை நடத்த, முழுமையான ஆரோக்கியமுள்ள 100 நபர்களை, SingHealth தேடி வருகிறது.

எவ்விதக் கடுமையான உடல்நலக் குறைபாடும் இல்லாத, 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய பெரியவர்கள், சோதனையில் பங்கேற்கலாம்.

பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர், 6323 7544, 8318 0685 தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Top