Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள டெங்கிச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் கடந்த 2 மாதங்களாகப் பதிவாகும் வாராந்திர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை நூற்றுக்குக் குறைவாக இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள டெங்கிச் சம்பவங்கள்

கோப்புப் படம்: Reuters

சிங்கப்பூரில் கடந்த 2 மாதங்களாகப் பதிவாகும் வாராந்திர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை நூற்றுக்குக் குறைவாக இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்குப் பிறகு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதன்முறை.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 4,000 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 27,000-க்கும் மேல்.

2019இல் அந்த எண்ணிக்கை 11,000 இருந்தது.

டெங்கிக் கிருமியைப் பரப்பும் பெண் ஏடிஸ் கொசுக்களின எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதை அது குறிப்பதாகக் கொள்ளலாம் என்று தொற்றுநோய் நிபுணர் ஒருவர் கூறினார்.

ஆனால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரும் உணர்வதால், டெங்கியால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் தற்போது 4 டெங்கிக் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

அதில் ஆகப் பெரியது, புளோரன்ஸ் ரோடு ( Florence Road), ஹவ்காங் அவென்யூ 2, (Hougang Avenue 2) ஆகிய இடங்களில் உள்ளது.

கடந்த 2 வாரங்களில் அங்கு 13 பேர் பாதிக்கப்பட்டனர்.

மற்ற 3 குழுமங்களில் 2 அல்லது 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்