Images
COVID-19: சிங்கப்பூரில் நேற்று மேலும் 26 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 26 பேர் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 58,694.
மேலும் 170 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்னும் 53 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 58,946 பாதிக்கப்பட்டனர். 29 பேர் மாண்டனர்.