சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,061 பேர் வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 2,061 பேர் வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகளில் 1,147 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அவர்களில் 210 பேருக்கு உயிர்வாயு கொடுக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 27 பேரின் உடல்நிலை சீராக இல்லை. அவர்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் 55 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையில் COVID-19 நோயாளிகள் 2,061பேர் மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களில் 324 பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்.