Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19,500-ஐத் தாண்டியது

சிங்கப்பூரில், சாதனை அளவாக நேற்று 1,337பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், சாதனை அளவாக நேற்று 1,337பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களையும் சேர்த்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 19,631 ஆனது.

அத்துடன் நேற்று, புதிதாக 611 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,860 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

மூவர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

அவர்களில் ஒருவர், 44 வயது சிங்கப்பூர்ப் பெண்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கெனவே, கிருமித்தொற்று இருந்தது.

மற்றொரு சிங்கப்பூரர், சாங்கி பொது மருத்துவமனையில், பயிற்சிவழி சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் 25 வயது சிங்கப்பூர்ப் பெண்.

மூன்றாமவர், 53 வயது நிரந்தரவாசி. அவருக்கு வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் தோன்றவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்