Images
  • sg covid (15)
    (கோப்புப் படம்: Reuters/Edgar Su)

COVID-19: சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 58,058 பேர் குணமடைந்துள்ளனர்


சிங்கப்பூரில் நேற்று மேலும் 6 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 58,058 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

இன்னும் 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

31 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.



Top