Images
  • sg covid (13)
    (கோப்புப் படம்: Singapore Ministry of Manpower)

COVID-19: 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சிங்கப்பூரில் நேற்று, மேலும் 6 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 58,064 பேர், முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இன்னும் 22 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் ஒருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

மற்றவர்களின் உடல்நிலை தேறிவருகிறது. 

34 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிக்கப்படுகின்றனர்.

அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை, மாற்றமின்றி 28 ஆக நீடிக்கிறது. 

Top