Images
  • USS
    படம்:  Alvin Chong

Singapore Rediscovers பற்றுச்சீட்டுகள் - முன்பதிவுகளை எதிர்நோக்கி ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் தயார்நிலையில்

சிங்கப்பூரர்களுக்கு Singapore Rediscovers பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவிருப்பதை முன்னிட்டு, முன்பதிவுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் தயார்நிலையில் உள்ளன.

சிங்கப்பூர் பயணத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், 18 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு, 100 வெள்ளி பெறுமானமுள்ள Singapore Rediscovers பற்றுச்சீட்டுகள் அடுத்த மாதம்-முதல் தேதியில் இருந்து வழங்கப்படும்.

உள்ளூரிலேயே ஹோட்டல்களில் தங்குவதற்குப் பலரும் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

அது ஹோட்டல்கள் உட்பட, COVID-19 நோய்ப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் சுற்றுப்பயணத் துறைக்கு சிங்கப்பூரர்கள் ஆதரவளிக்க ஊக்குவிக்கும் என சிங்கப்பூர் ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்தது.

மேலும், அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ள, குறைந்தது 50 சுற்றுலாத்தலங்கள், நூற்றுக்கும் அதிகமான சுற்றுலாத் திட்டங்களை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலாத் தலங்களுக்கான சங்கம் கூறியது.

Top