Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் - ஏனைய விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தார்

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட ஊழியர், மற்ற தங்குமிடங்களில் வசிக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் - ஏனைய விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தார்

(கோப்புப் படம்: Gaya Chandramohan)

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட ஊழியர், மற்ற தங்குமிடங்களில் வசிக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு, வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிக்கும் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த மாதம் 15ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனைகளின் மூலம் அவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு சமூகப் பராமரிப்பு வசதிக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

அவருடன் ஒரே மாடியில் வசிப்போரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் BluePass கருவியைக் கொண்டு, அவருடைய தொடர்புத் தடங்கள் அடையாளம் காணப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் மீண்டும் நோய்ப்பரவல் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து அமைச்சு எச்சரித்துள்ளது.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டுமென அது வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்