Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்த்ததைவிட மெதுவாக வளர்ச்சி காணும்: சிங்கப்பூர் நாணய வாரியம்

சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்த்ததைவிட மெதுவாக வளர்ச்சி காணும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்த்ததைவிட மெதுவாக வளர்ச்சி காணும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

என்றாலும், அடுத்த ஆண்டில் கணிக்கப்படும் போக்கை விட அது மேம்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கிருமிப்பரவல் மீண்டும் தலைதூக்காமலோ பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் பின்னடைவு ஏற்படாமலோ இருந்தால் அது சாத்தியம் என்று வாரியம் குறிப்பிட்டது.

அண்மை அரையாண்டு மதிப்பீட்டின்படி, பொருளியல் நடவடிக்கைகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்கி, எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், உள்நாடு சார்ந்த போக்குவரத்துத் துறை படிப்படியாக மேம்படும்.

உலகப் பொருளியல் மீட்சிக்கு இடையே, வெளிப்புறத் தேவைகள் அதிகரித்திருப்பதால், வர்த்தகம் சார்ந்த உற்பத்தித் துறைக்கு ஆதரவு கிடைக்கும்.

ஆயினும் மூலப் பொருள் விலையேற்றம், மனிதவளப் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதியில் கட்டுமானத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று வாரியம் கூறியது.

இந்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு ஆறிலிருந்து ஏழு விழுக்காடு வரை இருக்கும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் நாணய வாரியம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்