சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில் 90க்கும் அதிகமான திரைப்படங்கள்
சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில், இவ்வாண்டு 90-க்கும் அதிகமான திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில், இவ்வாண்டு 90-க்கும் அதிகமான திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.
நேற்று தொடக்கம் கண்ட விழா, 30ஆவது முறையாக நடத்தப்படுகிறது.
அதுவே தென்கிழக்காசியாவில் ஆக நீண்ட காலமாக நடைபெற்று வரும் திரைப்பட விழா.
உள்ளூர் இயக்குநர் அந்தோணி சென்னின் படைப்பில் உருவான Wet Season திரைப்படம், திரைப்பட விழாவைத் தொடக்கி வைத்தது.
நாளை நடைபெறவிருக்கும் 56ஆவது Golden Horse விருது நிகழ்ச்சியிலும், அந்தப் படம் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவிருக்கிறது.
6 விருதுகளுக்கு அது நியமனம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழா அடுத்த மாதம் முதல் தேதி வரை நடைபெறும்.
கேப்பிட்டோல் (Capitol) அரங்கம், சிங்கப்பூர் தேசியக் காட்சியம் உள்ளிட்ட இடங்களில் விழாவில் இடம்பெறும் திரைப்படங்களைப் பொதுமக்கள் பார்க்கலாம்.