Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பெரும்பாலான நிறுவனங்கள் முதல் காலாண்டில் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்திவிட்டன

சிங்கப்பூரின் பெரும்பாலான நிறுவனங்கள், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்திவிட்டன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பெரும்பாலான நிறுவனங்கள், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்திவிட்டன. 

கட்டுமானம், மொத்த வர்த்தகம், உற்பத்தித் துறை ஆகியவற்றில் தேவை குறைந்ததால் கட்டணம் தாமதமாகச் செலுத்தப்படும் பிரச்சினையைக் குறைக்க முடிந்தது.

இருப்பினும் சில்லறை வர்த்தகம், சேவைத் துறைகள் உரிய நேரத்தில் கட்டணத்தைச் செலுத்துவதில் இன்னமும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன.

சிங்கப்பூர் வர்த்தகக் கடன் அமைப்பு அதனைத் தெரிவித்தது.

செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணத்தில் பாதிக்கும் குறைவாகக் கட்டியிருந்தால், அது தாமதமாகச் செலுத்தும் கட்டணமாகக் கருதப்படும்.

இருப்பினும், அதிகமான பொருளியல் நடவடிக்கைகள் இப்போது அனுமதிக்கப்படுவதால், வரும் மாதங்களில் நிலைமை சீரடையும் என வர்த்தகக் கடன் அமைப்பு எதிர்பார்க்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்