Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீடுகளுக்கு வெளியே உள்ள தேசியக் கொடிகளை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்; இல்லையெனில் அபராதம்

வீடுகளுக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள தேசியக் கொடிகள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும்.

வாசிப்புநேரம் -
வீடுகளுக்கு வெளியே உள்ள தேசியக் கொடிகளை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்; இல்லையெனில் அபராதம்

படம்: Jeremy Long

வீடுகளுக்கு வெளியில் கட்டப்பட்டுள்ள தேசியக் கொடிகள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தை முன்னிட்டு ஜூலை முதல் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் வீடுகளுக்கு வெளியே சிங்கப்பூர்க் கொடிகளைக் கட்டலாம்.

இந்த ஆண்டு COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரர்கள் ஒன்றுபட்டு இருக்க ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து தேசியக் கொடிகளைக் கட்ட அனுமதிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த, கொடிகளைக் கட்ட அனுமதி கேட்டதாக, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்தது. அதற்கு இணங்கும் வகையில் இந்த ஆண்டு விதிமுறைகளை மாற்றியமைக்க அதிபர் ஹலிமா யாக்கோப் ஒப்புதல் அளித்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தேசியக் கொடியை அகற்றத் தவறுபவர்களுக்கு, தேசியச் சின்னங்கள் சட்டத்தின்கீழ் 1,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்