Images
  • minister heng swee keat g20
    (படம்: MCI Photo by Terence Tan. Facebook/Heng Swee Keat)

உலக நாடுகள் நீண்டகாலக் கட்டமைப்புச் சவால்களை எதிர்கொள்ள மறந்துவிடக் கூடாது : துணைப் பிரதமர் ஹெங்

நாடுகள், அவற்றின் பொருளியல்களைச் சரிப்படுத்தி வரும் வேளையில், நீண்டகாலக் கட்டமைப்புச் சவால்களை எதிர்கொள்ள மறந்துவிடக் கூடாது எனத் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

G20 நிதியமச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோரின் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு அவர் தமது Facebook பக்கத்தில் அவ்வாறு பதிவிட்டார்.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டார்.

நிலைமை சீராகும் போது, எல்லைகளைப் பாதுகாப்பான முறையில் திறக்க நாடுகள் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்றார் திரு. ஹெங்.

இருப்பினும் கிருமிப்பரவல் சூழல், பருவநிலை மாற்றம் போன்ற சில நீண்டகாலச் சவால்களை மிகைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்ப்பரவல்களுக்குத் தயாராக இருக்க, நாடுகள் இன்னும் கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் திரு. ஹெங் வலியுறுத்தினார்.

Top