Images
  • cbd
    (படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர்ப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வளர்ச்சி

சிங்கப்பூர்ப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட சற்று அதிகமாகச் சுமார் 7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

அதன் வளர்ச்சி ஆறரை விழுக்காடாக இருக்கலாம் என முன்னோடி மதிப்பீடுகள் காட்டின.

காலாண்டு அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டதைவிட 0.8 விழுக்காட்டு அதிகமாக 1.3 விழுக்காடு விரிவடைந்தது.

வர்த்தக, தொழில் அமைச்சு இவ்வாண்டு முழுமைக்குமான வளர்ச்சி முன்னுரைப்பைச் சுமார் 7 விழுக்காட்டுக்கு மேல்நோக்கித் திருத்தியுள்ளது.

Top