Images
  • sg skyline
    (படம்: Genevieve Loh)

சிங்கப்பூர்ப் பொருளியலின் வளர்ச்சி விகிதம், கடந்த காலாண்டில் மெதுவடைந்தது

சிங்கப்பூர்ப் பொருளியல், கடந்த காலாண்டில், குறைவான வேகத்தில் வளர்ச்சி கண்டிருந்தது.

ஆண்டு அடிப்படையில் அது ஆறரை விழுக்காடு வளர்ச்சி கண்டது.

அதற்கு முந்திய காலாண்டில் பதிவான சுமார் 15 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவு.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த காலாண்டில், அதற்கு முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில், பூஜ்யம் புள்ளி 8 விழுக்காடு அதிகரித்திருந்தது.

அதற்கு முந்திய காலாண்டில் அது கிட்டத்தட்ட ஒன்றரை விழுக்காடு சுருங்கியிருந்தது.

அனைத்துத் துறைகளிலும் உற்பத்தி விரிவடைந்தது வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

Top