Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் சுகாதாரக் கட்டமைப்பு மீதான நெருக்கடி தணிந்து வருகிறது: சுகாதார அமைச்சு

சிங்கப்பூர் சுகாதாரக் கட்டமைப்பு மீதான நெருக்கடி தணிந்து வருவதாக, சுகதார அமைச்சின் புதிய தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் சுகாதாரக் கட்டமைப்பு மீதான நெருக்கடி தணிந்து வருகிறது: சுகாதார அமைச்சு

(கோப்புப் படம்: Mediacorp)

சிங்கப்பூர் சுகாதாரக் கட்டமைப்பு மீதான நெருக்கடி தணிந்து வருவதாக, சுகதார அமைச்சின் புதிய தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்தவாறே COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடையும் திட்டம் சீரான நடைமுறைகளோடு செயல்பட்டுவருகிறது.

வீட்டிலிருந்து குணமடையும் பத்தில் ஒன்பது பேருக்கு, அவர்கள் தகவலைச் சமர்ப்பித்த ஒரு நாளைக்குள் உரிய ஆதரவு கிடைக்கிறது.

பத்துப் பேரில் எட்டுக்கும் அதிகமானோருக்கு இரண்டு மணி நேரத்துக்குள் தொலைமருத்துவச் சேவைக்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே குணமடையும் திட்டத்தில் கிடைத்துள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியளிப்பதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. திட்டத்தை இன்னும் மேம்படுத்தும் வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அது தெரிவித்தது.

தொழில்நுட்பத் திறன்கள் இல்லாமல் வீட்டில் குணமடையும் மூத்த நோயாளிகளுக்கு உதவ, தனிப்பட்ட குழுக்களை நிறுவுவது அவற்றுள் ஒன்று.

வீட்டிலிருந்தே குணமடையும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, உயிர்வாயு அளவு குறைந்தாலோ உடனே 995 என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்