Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - ஹாங்காங் சிறப்புப் பயணமுறை திட்டமிட்டபடி நாளை தொடங்கும்

ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை, திட்டமிட்டபடி நாளை தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - ஹாங்காங் சிறப்புப் பயணமுறை திட்டமிட்டபடி நாளை தொடங்கும்

(படம்: Usplash/Ruslan Bardash and Reuters/Edgar Su)

ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை, திட்டமிட்டபடி நாளை தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளும், COVID-19 சோதனை செய்துகொள்வது கட்டாயம்.

ஹாங்காங்கில் நாலாம் கட்டக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஹாங்காங்கில் நோய்ப்பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இருதரப்பு சுகாதார அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இருதரப்பு ஏற்பாட்டின் கீழ், சிங்கப்பூரிலோ, ஹாங்காங்கிலோ,7-நாள்களில் சராசரியாக 5க்கும் அதிகமான தொடர்புபடுத்தப்படாத புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானால் சிறப்புப் பயணமுறை ரத்துசெய்யப்படக்கூடும்.

அந்த எண்ணிக்கை தற்போது 2.14ஆக உள்ளதாய் ஆணையம் கூறியது.

ஹாங்காங்கில் அடுத்த 3 நாள்களில்,ஒருவேளை 22 தொடர்புபடுத்த முடியாத கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியானால், அந்த எண்ணிக்கை 5ஐக் கடந்துவிடும்.

அவ்வாறு நேர்ந்தால், ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கு 7 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்