Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஹாங்காங் கட்டுப்படுத்தப்பட்ட பயண முறை - சில நாள்களிலேயே அதிகரித்துள்ள விமானச் சீட்டுக் கட்டணங்கள்

சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கட்டுப்படுத்தப்பட்ட பயண முறையை தொடங்கவிருப்பதாக அறிவித்த சில  நாள்களிலேயே  விமானச் சீட்டுக் கட்டணம் அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கட்டுப்படுத்தப்பட்ட பயண முறையை தொடங்கவிருப்பதாக அறிவித்த சில நாள்களிலேயே விமானச் சீட்டுக் கட்டணம் அதிகரித்துள்ளது.

டிசம்பர் வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இருவழி விமானச்சீட்டுகள் தற்போது 558 வெள்ளியிலிருந்து விற்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் (அக்டோபர் 15) அவை சுமார் 400 வெள்ளிக்கு விற்கப்பட்டன.

இந்நிலையில்,ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதன் தொடர்பில் இணையத் தேடல்கள் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக South China Morning Post செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பயண முறை அறிவிக்கப்பட்ட ஓரே நாளில் இருவழி விமானச்சீட்டுக் கட்டணம் 57 விழுக்காடு அதிகரித்தது.

புதிய ஏற்பாடுகளின்வழி இருதரப்பிலிருந்தும் பயணம் மேற்கொள்வோர் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவையும் நிறைவேற்ற வேண்டியதில்லை.

இருப்பினும், பயணிகள் தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லையென்பதை உறுதி செய்யவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்