Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு இனி 7 நாள்கள்

ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு இனி 7 நாள்கள்

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு இனி 7 நாள்கள்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு 14இலிருந்து 7 நாள்களுக்குக் குறைக்கப்படுகிறது.

ஹாங்காங்கில் மேம்பட்டிருக்கும் உள்ளூர்க் கிருமிப்பரவல் நிலவரம் அதற்குக் காரணம்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு மணி 11:59 முதல், ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகள் 7 நாள்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றவேண்டும்.

தகுதிபெறுவோர் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அதை நிறைவேற்றலாம்.

இங்கு வந்தவுடன் அவர்கள் COVID-19 Polymerase Chain Reaction (PCR) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இன்னொரு PCR பரிசோதனை 7 நாள்கள் முடிவதற்குள் எடுக்கப்படும்.

மேலும், ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு மணி 11:59 முதல், பிரிட்டன், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான நுழைவுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

கடந்த 14 நாள்களில், பிரிட்டன், தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதிச் சீட்டு வைத்திருப்போரும் குறுகியகால அனுமதியில் இருப்போரும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இங்கு நுழைவதற்குப் பொருத்தமான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் 14 நாள்கள் சமூகத் தனிமைப்படுத்தும் இடங்களில் தங்கவைக்கப்படுவர். அவர்கள் வசிப்பிடத்தில் கூடுதல் 7 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்