Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவலை எதிர்த்துப் போராட உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்: துணைப் பிரதமர் ஹெங்

கொரோனா கிருமிப்பரவலை எதிர்த்துப் போராட நாடுகளுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலுமான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவலை எதிர்த்துப் போராட நாடுகளுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலுமான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார்.

கிருமிப்பரவலை முறியடிக்கவும் தொற்றுக்குப் பிந்திய முன்னேற்றத்தைக் காணவும் அனைத்துலக அறிவியல் சமூகத்தில் ஆராய்ச்சிகளும் புத்தாக்கங்களும் தொடரவேண்டும் என்றார் அவர்.

ஒன்பதாவது முறையாக நடைபெறும், இளம் அறிவியலாளர்களுக்கான அனைத்துலகக் கூட்டத்தில் திரு. ஹெங் பேசினார்.

எல்லை கடந்து, அரசாங்கங்கள் கடந்து கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியை இரட்டிப்பாக்கவேண்டும் என்றார் அவர்.

அத்துடன், நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பைத் தளமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்பதையும் துணைப்பிரதமர் சுட்டினார்.

அவ்வாறு செய்வது கிருமிப்பரவலை மட்டுமின்றி வறுமை, மூப்படைதல், பருவநிலை மாற்றம் ஆகிய உலகளாவிய சவால்களையும் சமாளிக்க உதவும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்