Images
  • changi airport (1)
    (கோப்புப் படம்: Reuters/Edgar Su)

5 நிரந்தரவாசிகள் உள்பட நேற்று வெளிநாடுகளிலிருந்து வந்த 24 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியானவர்களில் 24 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

அவர்களின் விவரங்கள்....

  • சிங்கப்பூர் நிரந்தரவாசி - 5

அவர்கள் இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள்.

  • சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 1

அவர் உக்ரேனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.

  • நீண்ட கால விசா அட்டை - 1

அவர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்.

  • மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 2

அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

  • வேலை அனுமதியின் கீழ் வந்தவர்கள் - 1

அவர் பங்களாதேஷிலிருந்து வந்தவர்.

  • வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 12

அவர்கள் பங்களாதேஷ், இந்தியா, மலேசியா ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்.

  • குறுகியக் கால விசா அட்டையில் வந்தவர்கள் - 2

அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ஒருவர் குடும்பத்தைக் காண சிங்கப்பூருக்கு வந்தார். மற்றவர் வேலை காரணமாக வந்தார்.

24 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டனர் என்று அமைச்சு தெரிவித்தது.


 

Top