Images
  • sg covid (15)
    (கோப்புப் படம்: Reuters/Edgar Su)

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்றால் 5 பேர் பாதிப்பு - விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று 5 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருமே, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

மெக்சிக்கோவிலிருந்து வந்த சிங்கப்பூரரும் பிரிட்டனிலிருந்து வந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இருவர், பிலிப்பீன்ஸிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.

இன்னொருவர், ஓமனிலிருந்து வந்த நீண்ட கால வருகை அட்டை வைத்திருப்பவர்.

அவர்கள் ஐவரும், சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

Top