Images
  • sg covid (12)
     (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் நேற்று 18 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று 18 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருமே, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

உள்ளூர் அளவில் தொடர்ந்து இரு வாரங்களாக நோய்த்தொற்று ஏதும் பதிவாகவில்லை.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் விவரங்கள்:

  • புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். அவர்களில் ஒருவர் நெதர்லந்திலிருந்தும், இன்னொருவர் இந்தோனேசியாவிலிருந்தும் திரும்பினர்.
  • ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
  • 13 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். அவர்கள் இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
  • ஒருவர் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவரைச் சார்ந்திருப்பவர்.
  •  மற்றொருவர் பிலிப்பீன்ஸிலிருந்து குறுகிய கால அனுமதியில் இங்கு வந்தவர்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.


 

Top