Images
  • sg covid (16)

COVID-19: சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியானோரின் விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று 22 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

-- இருவர் இந்தியாவிலிருந்து திரும்பிய நிரந்தரவாசிகள், இருவர் சிங்கப்பூரர்கள்

-- இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலிருந்து வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரைச் சார்ந்திருக்கும் 3 பேர்.

-- ஒருவர் சிங்கப்பூரில் கல்வி பயிலும் இந்தோனேசியர்

-- இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் 10 பேர். அவர்களில் இருவர் இல்லப் பணிப்பெண்கள்

-- இந்தியாவிலிருந்து திரும்பிய நீண்ட கால வருகை அட்டை வைத்திருக்கும் ஒருவர்.

-- அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இங்கு வந்த குறுகிய கால அனுமதி அட்டை வைத்திருக்கும் மூவர்

சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலோ யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Top